முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் பலி!     

இந்தியாவின் வாலாஜாபேட்டை, புலம்பெயர் தமிழர்கள் தங்கியிருந்த முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கியிருந்த முகாமில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 8 ஆம் திகதி வீட்டில் தனியாக தங்கியிருந்த துஷாந்தினி என்ற பெண்ணை அவரின் மச்சான் தயாபரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து, தன்னை காப்பாற்றி கொள்ள தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில், சென்னை அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட துஷாந்தினி, நேற்று உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை  10.00 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது. துஷாந்தினிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாலாஜாபேட்டை பொலிஸார் தயாபரனை கைது விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Comments