சிறைச்சாலைகளை புனரமைப்பதற்காக விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை
சிறைச்சாலைகளை புனரமைப்பதற்காக விசேட செயலணியொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நீதி அமைச்சும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் இந்த செயலணியை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சிறைக்கைதிகளை சமூகமயப்படுத்தும் நோக்கில் இந்த விசேட செயலணி ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிடுகின்றார்..
