நான்கு பேருக்கு அமைச்சு பதவி வழங்க ரகசிய பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் இருவரின் நல்லாட்சி வலையில் மூன்று அரசியல் கட்சிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் ஐந்தாண்டு திட்டத்திற்கு தேவையான அரசியல் ஸ்தீரதன்மையை உருவாக்குவதாகவும் இந்த கட்சிகளை சார்ந்த நான்கு பேருக்கு அமைச்சு பதிவிகள் வழங்குவதற்கு பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிய வற்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மலையகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும், வடக்கில் ஒருவருக்கும், கிழக்கில் ஒருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் குறித்த நபர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவது குறித்து பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

2017 -ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை நவம்பர் மாதம் 10-ம் திகதி சமர்பிக்க உள்ளதோடு அதற்கு பின் குறித்த பதவிகளை வழங்கவும் அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் இது குறித்து இரகசிய பேச்சு வார்த்தைகளில்  ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஈடுப்பட்டுள்ளனர்.

Comments