திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு பிணை கையொப்பம் இட்டவர் விளக்கமறியலில்



jail

எப்.முபாரக்
author image திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒருவருக்கு பிணைக்கு கையொப்பம் இட்ட சந்தேக நபரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை(6) உத்தரவிட்டார்.
தங்கநகர்,கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 42வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு பிணையாளராக கையொப்பம் இட்டுள்ளார் திருட்டுகளுடன் தொடர்புடையவர் வழக்குத் தவணைகளுக்குத் சமூகமளிக்காது தலைமரைவாக இருந்ததால் பொலிஸார் பிணையாளரை நேற்று செவ்வாய்கிழமை (6) காலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் பிணையாளரான சந்தேகநபரை அன்றைய தினமே மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments