Skip to main content

இலவசமாக கண் பரிசோதனை முகாம் கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.




பிரசுரிக்கப்பட்டது: 06:22, 19.Sep 2016

இருபதாவது வருடமாக இம்முறையும் கண்ணில் வெள்ளை படர்ந்தவர்களுக்கான இலவசமாக கண் சத்திரத் சிகிச்சை மேற் கொள்வதற்கான கண் பரிசோதனை முகாம் ஒன்றினை அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தின் நலன் புரி அமைப்பு ஏற்பாடு செய்த மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று (18) அமைப்பின் தலைவர் என்.ஏ.எம். பதுறுதீன் உப தலைவர் அலி உஸ்மான் ஆகியோரின் இணைத் தலைமையில் கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.
ஜமியதுஸ் சபாப் நிறுவனத்தின் அனுசரணையில் இடம் பெற்ற கண் மருத்துவ முகாமில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டொக்டர் அஸதுல்லா மற்றும் அவரது உதவியாளரும் கலந்து கொண்டு நடாத்தினர் இதன்போது ஜமியதுஸ் சபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.தாஸிம் மௌலவி, பாடசாலை அதிபர் கே.எம்.எம். நாளிர் உற்பட அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தின் நலன் புரி அமைப்பின் உறுப்பினர்களும் கலந்த கொண்டனர். நிகழ்வில் மூவின மக்களையும் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு அதில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு புத்தளம் குவைத் வைத்திய சாலையில் இடம் பெறும் இலவச சத்திர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவ்வருடமும் சுமார் ஆயிரம் பேருக்கு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ள மேற்படி அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

Comments