கடலில் மூழ்கி ஒருவர் பலி!

திருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (29) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமது வீட்டிற்குப் பின்புறமாகவுள்ள கடலில் குளிக்கச் சென்ற போதே இந்த நபர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் மூழ்கியவரை மீட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே இவ்வாறுகடலில் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

Comments