கூட்டு எதிர்க்கட்சிகள் ஆரம்பிக்க உள்ள புதிய அரசியல் கட்சிக்கு தலைவராக மகிந்த ராஜபக்ஸ.

கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பிக்க உள்ள புதிய அரசியல் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ என்பது உறுதியானது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர், அரசியல் கட்சியை பதிவு செய்ய அனுமதி கிடைத்தவுடன் புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் கட்சிக்கான சில பெயர்கள் மற்றும் சின்னங்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தற்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.

மகிந்த தலைமையிலான புதிய அரசியல் கட்சியில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மாத்திரமல்லாது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள், பல சிவில் அமைப்புகள் என இணைந்து கொள்ள உள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Comments