சர்வதேச நாடுகள் இலங்கையை சாதகமாகவே நோக்குகின்றன
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், நீதித்துறையின் சுதந்திரம், போன்ற எண்ணக்கருக்கள் அமுல்படுவதினால் சர்வதேச நாடுகள் இலங்கையை சாதகமாக நோக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தின் பின்னர் நியூயோர்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆகியோர் இலங்கiயின் ஜனாதிபதியுடன் நெருங்கிச் செயற்பட்டாலும், இவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இலங்கையின் சர்வதேச உறவுகளில் பாதிப்பு ஏற்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளரின் கேள்விக்கு பதிலலித்த ஜனாதிபதி எந்தவொரு நாட்டின் அரசாங்கத் தலைவரும் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இலங்கையின் சர்வதேச உறவுகளில் பாதிப்பு ஏற்படாது. அனைத்து உறவுகளும் தனிப்பட்டரீதிலின்றி கொள்கை ரீதியான வியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுவதே இதற்குக்காரணம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின்போது சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இதனை பயன்படுத்தி தாய்நாட்டை சர்வதேச மட்டத்தில் வெற்றிபெறச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக நேச நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்த் ஹூசைனும் இலங்கை தொடர்பில் தெளிவான கருத்துக்களை வெளியிட்டார்கள். இவ்வாறான சகலரதும் ஒத்துழைப்பும் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்
நாட்டு மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தும் வகையில் சிறந்த அரச நிர்வாகத்தை மேற்கொள்வது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Comments
Post a Comment