விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு அவசியம்!

இலங்கை விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இதனை வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்,  பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான நீதி விசாரணைப் பொறிமுறைமைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் குறித்த குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பலவந்த காணாமல் போதல் கடத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தின் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், இந்த பிரகடனத்தின் நியதிகள் பின்பற்றி அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Comments