பூஜித் ஜயசுந்தரவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்றைய தினம் இலங்கையின் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பொலிஸாருக்கு எதிராக அண்மையில் முறைப்பாடொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்திருந்தார்.

வீதிப் போக்குவரத்துக்களில் தனியார் பஸ்கள் ஈடுபடுகின்றபோது பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக கெமுனு விஜேரத்ன தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே பிரதிவாதியாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பாளராக கடமைபுரியும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Comments