கணவன்-மனைவி உறவு மேம்பட

 வாழ்க்கை துணையாக வருபவர்கள் கணவனிடம் அன்பு, பாதுகாப்பு போன்றவற்றையே அதிகமாக எதிர்பார்ப்பார்கள். அதனால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யுங்கள்.

     கணவன்-மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்படுவதற்கு ஒப்பீட்டு பேச்சுதான் காரணமாக இருக்கின்றன. கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ மற்றவர்களுடன் அழகு, பணம், படிப்பு என எந்த விஷயத்திலும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

     ஆரம்பத்தில் சகித்துக் கொண்டாலும் இந்த ஒப்பீடு பின்நாளில் பூதாகரமாக பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

     தங்கள் துணையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். எக்காரணத்தை கொண்டும் சந்தேக விதையை மனதில் விதைத்து விடாதீர்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

     தங்கள் துணைக்கு சம உரிமை கொடுங்கள்.

     கணவன்-மனைவி உறவில் 'பெர்ஷனல்' விஷயங்கள் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில் அதனை காரணம் காட்டி பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம். ஏனெனில் அவர்களும் பிறந்த வீடு, அலுவலக விஷயங்கள், நண்பர்கள் போன்ற வட்டங்களுக்குள் இருக்கின்றனர் என்பதை மறந்துவிட கூடாது. மறைத்த விஷயங்களை கூறி, ஏதேனும் உதவி கேட்டால், முழு மனதுடன் உதவி செய்யுங்கள். பழைய பிரச்சினைகளை மனதில் வைத்து எதுவும் பேசாதீர்கள். அது உறவை வலுப்படுத்தும்.

     மனைவியின் அழுகை, வலி, சிரிப்பு போன்றவற்றுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். 'அனைத்திற்கும் அழுகிறாள், இதற்கெல்லாம் சிரிக்கிறாள்' என்று  உதாசீனப்படுத்தாதீர்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இல்லறம் இனிக்கும்.
 

Comments