மைத்திரிக்கு கிடைத்த புதிய விருது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசியாவுக்கான பணிப்பாளரினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விருதானது வருடாந்தம் பொதுச் சுகாதார துறையில் சிறந்த தலைமைத்துவ பண்புகளையும், அபூர்வமான சாதனைகளை மேற்கொண்ட தனிநபர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்கு, குறிப்பாக புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கட்டுப்பாடுகள் தொடர்பான ஒழுங்குவிதிகளை உருவாக்கியமைக்கும், சிறுநீரக நோயினை கட்டுப்படுத்துவதற்கும் ஆற்றிய சிறப்பான பணிகளுக்குமாக இந்த விருது வழங்கி வைக்கபட்டது.

Comments