வடக்கில் ஊடகங்களுக்கு தடை என்கிறார் மஹிந்த!
ஊடகங்களுக்கு வடக்கில் இடம்பெறும் சில சம்பவங்களை வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உடுதும்பர பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நேற்று பேரணி ஒன்று நடத்தப்பட்டது. நீக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அந்த பேரணியின் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
பிரிக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் குறித்து கருத்து வெளியிடப்பட்டது.
இது தொடர்பான தகவல்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment