மோதலில் ஒருவர் – ஒருவர் படுகாயம்!

மாலபே, அதுருகிரிய , மஹஜன மாவத்தையில் இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதலில் மேலும் ஒருவர் படுகாயடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் மதுபானம் அருந்திய நிலையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 39 வயதான கொல்லன்னாவ பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments