மட்டக்களப்பு சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் வைத்து தப்பியோடியுள்ளார்.

இன்று காலை   இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று ஏறாவூரில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸாரின்  தாக்குதலில்   உள் காயங்களுக்கு  உட்பட்டுள்ளாரா  என்று பரிசோதனைக்கு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போதே அவர் தப்பித்து  சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற குறித்த நபரை  தீவிரமாக தேடும் பணியில் ஏறாவூர் பொலிஸார்  ஈடுப்பட்டு வருகின்றனர்.

Comments