மற்றுமொரு வர்த்தகர் மாயம்!

பண்டாரகம பகுதியில் இருந்து  நால்வருடன் திருகோணமலை பகுதியில் அரச வங்கியொன்றுக்கு சென்றிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வங்கிக்கு சென்றிருந்த மொஹமட் நஸ்ரின் எனும் 35 வயது நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் பகுதி ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற அவர், ஏலம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் பெற்ற சுமார் ஒரு கோடி ரூபா வரையான பணம் அவர் வசம் இருந்ததாக பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments