Skip to main content

பணத்துடன் வாகனத்தையும் கடத்திச் சென்ற இராணுவ வீரர்கள் கைது

(க.கிஷாந்தன்)
காரில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவரை தாக்கி அவர் வசமிருந்த 43 ஆயிரத்து 750 ரூபா பணத்துடன் குறித்த வாகனத்தையும் கடத்திச் சென்ற இராணுவ வீரர்கள் இருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புதளை பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி வந்துக்கொண்டிருந்த குறித்த காரினை பொரலந்தை ஹின்னாரங்கொல்ல பகுதியில் வைத்து வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் தாக்கப்பட்டவர் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை, சம்பவம் நடந்து குறுகிய நேரத்தில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் 31,39 வயதுடைய இராணுவ வீரர்கள் என பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.வெலிமடை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments