(முழு படங்கள் இணைப்பு ) வரலாற்றில் அதிகளவான மக்கள் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மாநாடு .

இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில் அதிகளவான மக்கள் கலந்து கொள்ளும் மாநாடாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குருணாகல் மாளிகா மைத்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது ஆண்டு விழா மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இருப்பதன் காரணமாவே இரண்டு முறை தோற்றும் தற்போது கட்சிக்கு முன்னோக்கி வர முடிந்துள்ளது.

ஜனாதிபதி காரணமாக இனங்களுக்கு இடையில் ஐக்கியமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பபட்டுள்ளது.

வரலாற்றில் அதிகளவான மக்கள் கலந்து கொண்ட மே தினக் கூட்டத்தை நாங்கள் காலியில் நடத்தினோம்.

அந்த சாதனையை முறியடித்து தற்போது கட்சியின் ஆண்டு விழா மாநாட்டில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் எனவும் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

அதேவேளை அங்கு உரையாற்றிய சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அனுரபிரியதர்ஷன யாப்பா,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று ஜனாதிபதிகளை நாட்டிற்கு உருவாக்கியது.

கட்சியை ஒன்றிணைக்க முடிந்த அனைத்து விதத்திலும் நாம் கட்சியை ஒன்றிணைப்போம்.நாங்கள் கட்சியின் தலைவர்களுடன் நட்புறவை அதிகரித்து, நவீன கட்சியாக கட்சியை உருவாக்கி இணைத்து பணியாற்றுவோம் என்றார்.













Comments