நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கப்படவேண்டும்!

உயர்தரத்தில் சித்திபெறும் 20 வீதமானோரே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதாகவும், மிகுதி 80 வீதமானோருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு இல்லாமல் போவதாகவும் சுட்டிக்காட்டிய உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லநாட்டுக்கு தனியார் வைத்திய கல்லூரிகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்  அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்

தனியார் பல்கலைக்கழகங்கள் 10 தொடக்கம் 15 ஆரம்பிக்கப்படுமானால் பெருமளவான பணத்தினை எமது நாட்டில் சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நாம் இவை யாவற்றையும் செய்வது நாட்டுக்காக என்றும், பல்கலைக்கழகங்களை சேர்ந்த 7 பீடாதீபதிகள் தன்னை வந்து சந்தித்து இதற்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளா

Comments