பிரதி பொலிஸ் மா அதிபர்களது வாகனங்கள் விபத்து!
கொழும்ப கெப்பட்டிபொல மாவத்தையில் வைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் பொலிஸ் அதிகாரிகளின் குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் எதுவுமில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரது வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


Comments
Post a Comment