அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 33வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் அமெரிக்கா விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் கயந்த கருணாதிலக உட்பட விசேட தூதுக் குழுவொன்று அமெரிக்கா செல்கிறது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்மாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments