நுவரெலியாவில் ஒரு கொடூரனுக்கு மரண தண்டனை!
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கணவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை நுவரெலியா உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர். சுமுது பிரேமசந்திர தீர்ப்பளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மினுவன்கொடை பிரதேசத்தை சேர்ந்த உடுராவண ரம்பெடிகே அனுசா காயத்ரி என்பவரை அவருடைய கணவர் ஆடிகல இந்திக ரொசான் கொலை செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பொலிஸார் 1999 ஆம் ஆணடு கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 1998-ம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முதல் 1998-ம் ஆண்டு செப்டெம்பர் மாத பகுதிக்கள் தனது மனைவியை நுவரெலியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த காலப் பகுதியில் மனைவியை, நுவரெலியா பீதுருதலாகல மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த காட்டுப் பகுதிக்கு புல் வெட்டுவதற்காக சென்ற நபர் ஒருவர், சடலமொன்று இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.
நுவரெலியா பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.இந்த காலப் பகுதியில் குறித்த பெண் வசித்து வந்த கம்பஹா பகுதியில் அவர் காணாமல் போயுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் நுவரெலியா காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்கும் காணாமல் போனதாக கூறப்படும் பெண்ணிற்கும் தொடர்பு இருக்கின்றதா?
உறுதிசெய்துகொள்ளும் முகமாக பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் வழங்கி சடலதத்தை பார்வையிடுமாறு அழைப்பு விடுத்ததனர்.
இதன் அடிப்படையில் பெண் வீட்டார், சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதுடன், காணாமல் போன பெண்ணின் சடலம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.சந்தேக நபரான குறித்த பெண்ணினுடைய கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையை அடுத்து இன்று குறித்த சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கி நுவரெலியா உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர். சுமுது பிரேமசந்திர தீர்ப்பளித்துள்ளார்.

Comments
Post a Comment