வீதி விபத்தில் மூவர் படுகாயம்!
கடற்படைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமுற்றனர் . இந்த விபத்து இன்று முற்பகல் வெலிமடை பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளையிலிருந்து கதிர்காம யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் தியத்தலாவையிலிருந்து கண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
முச்சக்கர வண்டியில் பயனித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது முச்சக்கர வண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஜவர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment