கொழும்பு அல்ஹிதாயா மாணவத் தலைவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு



h99
இதில் பிரதம அதிதிகளாக கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும் தொழிலதிபருமான எம்.ஸீ. பஹார்தீன், பிரதித் தலைவர் பீ.எம்.எம். றமீஸ், செயலாளர் எம்.ஸீ. இல்ஹாம் ஹனீப், பொருளாளர் எம்.எஸ்.எம். ஷாமில் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக திருமதி நூர் ஸஹ்ரியா பஹார்தீன், திருமதி எஸ். ஹினாயா ஹனீப், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் திருமதி றிஸானா நபீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவத் தலைவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து தமது பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பிரதம மாணவத் தலைவனாக (Head Prefect) 13 S வகுப்பைச் சேர்ந்த மாணவன் எம். ஆதில், பிரதம மாணவத் தலைவியாக (Head Prefect) 13 T வகுப்பைச் சேர்ந்த மாணவி எம்.எச்.எப். அப்ரா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
h h-jpg2-jpg3 h-jpg2-jpg3-jpg4

Comments