அரசாங்கத்தை மிரளவைக்கப்போகும் கூட்டு எதிர் கட்சி!

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய மக்கள் பலத்தைஎதிர்வரும் 8ம் திகதி இரத்தினபுரியில்  அரசாங்கத்திற்கெதிராக  காட்டப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபவித்ரா புதிய கட்சியின் ஆரம்பத்தை இரத்தினபுரியில் வரும் 8ம் திகதி வந்துபார்க்குமாறும் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு சம்பளம்அதிகரித்தமையானது நல்லாட்சி மூலம் வழங்கப்பட்ட பாரிய லஞ்ச தொகை என்றும்பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments