காத்தான்குடியில் புறா திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுவர்கள் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி-06, நூரணியா ஜும்ஆ பள்ளிவாயல் பகுதியில் உள்ள வீடொன்றில் புறா திருடிய சந்தேகத்தின் பேரில் இரு சிறுவர்கள் இன்று (24.09.2016) சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று சனிக்கிழமை மாலை புதிய காத்தான்குடி-06, அப்றார் நகர் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவன் புறா திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments