லசந்தவினை கொலை செய்தது கோத்தபாய?

சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே கொலை செய்ததாக   சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தின் போது மகிந்த அணியின் உறுப்பினர் ஒருவர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் வினவினார்.

இதற்கு பதிலளித்த பொன்சேகா, லசந்தவை கொன்றது கோத்தபாய என பதிலளித்தார்.

தற்போது இவ்விடயம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments