மதப் பிரசங்கங்களில் அரசியல் பேசவேண்டாம் – சவுதி இமாம்களுக்கு உத்தரவு

சவுதி அரேபியாவிலுள்ள ஒரு லட்சம் இமாம்கள் மற்று மதப்பிரச்சாரகர்கள் தமது பிரசங்கங்களின்போது, அரசியல் மற்றும் இனக்குழு மோதல்கள் தொடர்பான விஷயங்களை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளனர்.

மதப் பிரசங்கங்களில் அரசியல் பேசவேண்டாம் என சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தலை சவுதியின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமது பிரசங்கங்களின்போது எந்தவொரு தனிநபர் மட்டும் நாடுகளை சபிப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments