தமிழீழத்திற்கான புதிய அரசியலமைப்பு குறித்து விமல்!
வடக்கு – கிழக்கை இணைத்து தனி தமிழீழத்திற்கான கனவை நனவாக்கும் தேசிய மற்றும் சர்வதேச பிரிவினை வாதிகளின் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கபடுகின்றன.
இதனை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை காட்டிக் கொடுக்கும் அரசியலமைப்பையும் சக்திகளையும் தோல்வியடைய செய்வதற்கு நாட்டு மக்கள் பேதங்களை மறந்து போராட வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பு பாராளுமன்றத்தின் குழு அறை நான்கில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து தனது அதிகாரங்களை மீறிய வகையில் செயற்பட்டுள்ளார்.
ஆனால் அரசாங்கம் அவரது வருகைக்கு முன்னர் காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கான சட்ட மூலத்தை நிறைவேற்றியதுடன் , புதிய அரசியலமைப்பை நவம்பர் மாதம் கொண்டு வருவதாகவும் தகவலை கசிய விட்டது.
புதிய அரசியலமைப்பு விடயம் குறித்து அரசாங்கத்தின் தகவல்களின் பின்னணியில் மேற்குலக பிரிவினை வாதிகளே உள்ளனர்.
புதிய அரசியலமைப்பு என்பது மேற்குலக நாடுகளின் தயாரிப்பாகும். மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்ட பிரிவினைவாதிகளின் சக்திகளின் தேவையே புதிய அரசியல் அமைப்பின் நோக்கமாகும்.
இலங்கையை துண்டாடி வடக்கு, கிழக்கை இணைத்து தமிழீழம் அமைக்கும் திட்டத்தை தடுக்க மக்கள் திரள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment