நாட்டின் பணவீக்கம் தொடர்பில் ஆய்வறிக்கை!

நாட்டின் பணவீக்கம்  ஆகஸ்ட் மாதத்திற்குள் நூற்றுக்கு 4.5 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் ஜூலை மாதத்தில் அது 5.8 வீதம் இருந்துள்ளது எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம்? காய்கறிகள், பச்சை மிளகாய், சீனி, தேங்காய், அரிசி, நெத்தலி கருவாடு, அரிசி, பருப்பு, வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அத்தியவசிய பொருட்களின் விலை குறைவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, உணவு அல்லாத பொருட்களின் விலைகளில் நூற்றுக்கு 0.1 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் தேசிய நுகர்வு விலை சுட்டெண் 113.3 ஆக அறிவிக்கப்பட்டது.

முந்தைய மாதத்துடன் ஒப்பீட்டளவில் நூற்றுக்கு 1.6 வீதமான குறைவு என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.

Comments