கொழும்பு நோக்கி சென்ற நான்கு இளைஞர்களின் பயணம் சோகத்தில் முடிந்தது.

தனமல்வில – குடா ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தனமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பண்டாரவளை, எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கொழும்பு நோக்கி கார் ஒன்றில் பயணித்த போது, கார் தூண் ஒன்றில் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காரில் பயணித்த நால்வரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், தனமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை, எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஆறுமுகம் பாக்கியராஜ் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments