முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விற்பனை செய்ய முயற்சி .இரத்தினபுரி பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவன் ஒருவன் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் குறிப்பிட்ட பாடசாலையின் நிர்வாகம் குறித்த மாணவனின் பெற்றோரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர் .
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரத்தினபுரி பொலிஸார் குறித்த முஸ்லிம் மாணவனுக்கு போதைப் பொருட்களை வழங்கி வரும் நபர்கள் தொடர்பில் தேடுதல் முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக் காலமாக இரத்தினபுரி நகரில் உள்ள ஒருசில முஸ்லிம் வீடுகளில் போதைப் பொருட்கள் மிக இரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பிலும் இரத்தினபுரி பொலிஸார் மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர் .
இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் மாணவர்களையும் , சிறார்களையும் இலக்கு வைத்து இடம்பெற்று வரும் மேற்படி சமூக விரோத செயல்கள் தொடர்பில் பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் , ஆசிரியர்கள் , மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட ஜெம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் அனைவரும் மிக அவதானமாக இருக்குமாறு சமூக நலன் விரும்பிகள் எதிர்பார்கின்றனர்.

Comments
Post a Comment