நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
நாமல் ராஜபக்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டில்,எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03-ம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு விடப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும், பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நாமலுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அவர் சமூகமளிக்காமையினால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்ததாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவ்வாறான முறைப்பாடொன்றை தாக்கல் செய்ய அதிகாரம் இல்லை என நாமல் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள் குழாம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Comments
Post a Comment