ரணில் அடுத்த வாரம் இந்தியாவில்?

சென்ற ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவர் மீளவும் அடுத்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 4,5 மற்றும் 6-ம் திகதிகளில், ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு சென்று, நரேந்திர மோடியை இலங்கை வருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவும் ரணில் திட்டமிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்ட அனைத்து தகவலையும் இந்தியா ஊடகமொன்று வெளியீட்டுள்ளது.

Comments