பொலிஸ் தடுப்பில் இருந்தவர் தற்கொலை!
புசல்லாவ பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த ஒருவர், தடுப்பில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புசல்லாவ பொலிஸாரின் தகவல்படி சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே குறித்த சந்தேகநபர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான புசல்லாவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரே மரணமானவராவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment