ஆட்சி மாற்றத்திற்கு துணை புரிந்த தோட்ட மக்களை பழி வாங்கும் அரசு?
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபாலா சிரிசேனவிற்கு மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தங்களின் வாக்குகளை ஏனைய பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து வாக்களித்து அவரின் வெற்றியை உறுதி செய்தார்கள் அதன் மூலம் மைத்திரிபாலா சிரிசேன அவர்கள் நாட்டின் ஜனாதிபதியானார்கள்...

அது அவர் மனதில் நிச்சயம் இருக்க வேண்டும் அதே போல் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இவர்கள் வாக்களித்தார்கள் அதை பிரதமர் மறந்திருக்கமுடியாது. அதே வழியில் மகிந்தவை ஆதரித்த இ.தொ.க பிரமுகர்களையும் இம் மக்கள் கைவிடவில்லை தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் இராமநாதன் ஆறுமுகத்தையும் தெரிவு செய்தார்கள்.
இந்நிலையில் இன்று இவர்கள் தங்களின் நாளாந்த சம்பளத்தை கூட்டு ஒப்பந்தப்படி உயர்த்தும்படி கடந்த 18 மாதங்களால கோரிக்கைவிட்டும் அதற்கான பதிலை தோட்ட முதலாளிமார்களோ அல்லது தேயிலை உற்பத்தியில் இலாபம் பெறும் அரசோ அலட்டிக்கொள்ளாது இருப்பது மிகவும் வருந்ததக்கதாகும்.
இப்பொழுது இம்மக்கள் பாதைகளில் இறங்கி போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் இன்று அம் மக்கள் ஒப்பாரி வைத்து அழும் போராட்டத்தை நடத்தியதை பார்க்கும்போது அவர்களின் ஒப்பாரியில் வந்த வார்த்தைகள் பார்த்தக்கொண்டு இருந்த மக்களிடையே கண்ணீர் மழை பொழிய வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் படும் துன்பகரமான நிலையை கண்டும் காணாது இந்த இரு தலைவர்களும் இருப்பது இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருக்குத் அதிகமானவர்கள் தமிழர்கள் என்ற காரணத்திலா?? என எண்ணத்தோன்றுகின்றது.
அதை உறுதிபடுத்தும் வகையிலேயே இந்த நல்லாட்சி அரசும் நடந்துக்கொள்வதை பார்க்கும்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பற்றி யாரும் எந்தவித கவலையும் இல்லாதவர்கள் என நினைப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். அதை அரசு உறுதிபடுத்துவதைப்போல் நடக்காது இந்த இரண்டு தலைவர்களும் உடனடியாக இம்மக்களுக்கு உதவ வேண்டும் அதுவே மலையக மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியாகும்.

..

Comments
Post a Comment