மட்டக்களப்புக்கான இ.போ.ச.பஸ் சேவை இல்லாததால், பயணிகள் அவதி

காலை பத்து மணிக்கு பின்னர் ,மட்டக்கிளப்பு, சம்மாந்துறைக்கான இ.போ.ச .பஸ் சேவைகள் இரவு பத்து மணி வரை இல்லாததால் மட்டக்கிளப்பு செல்லும் பயணிகள் மாபெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
மட்டகிளப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று வர இருந்த பஸ்களுக்கான சாரதிகள், விடுமுறையில் இருப்பதாலும் மட்டக்கிளப்பிலிருந்து வரும் பயணிகள் குறைவு என்பதாலும் இவ்வாறான சிக்கலை பயணிகள், எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கடமையிலிருந்த ஒரு ஊழியர் காரணம் தெரிவித்தார்.
சுமார் 180 பயணிகள் ஒரே பஸ்ஸான, இரவு பத்துமணி பஸ்ஸிலேயே பயணிக்க வேண்டிய அவல நிலையை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எது எவ்வாறு இருப்பினும், கொழும்பிலிருந்து மட்டு நோக்கி செல்ல பயணிகள் கூடுதலாக இருப்பது தெரிந்தும், இ.போ.ச. உரிய சேவைகளை வழங்க தவறியது, மக்களை விசனம் கொள்ள செய்துள்ளது.இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு, நிர்வாகத்தினர் எதிர் காலத்திலாவது, உரிய நடவடிக்கைகளை எடுப்பார்களா?.

Comments
Post a Comment