வடக்கு,கிழக்கில் அரச அதிகாரிகளுக்கு இடமாற்றம்

வடக்கு,கிழக்கில் 5 வருடங்களுக்கு மேல் சேவையாற்றி வரும் பிரதேச செயலாளர்கள், உத விச் செயலாளர்கள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரி என சகலருக்கும் எதிர்வரும் ஜன வரி மாதம் முதலாம் திகதி முதல் இடமாற்றத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்து ள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மேற்படி அதிகாரிகள் சம்பந்தமாக முன்வைத்த விடயங்க ளை ஆராய்ந்த பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் பணிப்புரியும் பெரும்பாலான அரச அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்றச்சா ட்டுக்கள் இருப்பதாகவும் சிலர் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதில்லை எனவும் இவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகாரிகளின் பெரும்பாலானவர்கள் 5 வருடத்திற்கும் மேல் சேவையாற்றுவதாகவும் இவர்களுக்கு இடமாற்றம் வழங்குமாறும் கூட்டமைப்பினர் கோரியுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Comments