வடக்கில் போராளிகளுக்கு விசேட மருத்துவ பரிசோதனை!

முன்னாள் போராளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசேட மருத்துவ பரிசோதனைகள் எதிர்வரும் வியாழன்(15), வெள்ளிக்கிழமைகளில்(16) முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

வியாழக்கிழமை மு.ப 8 மணிக்கு முல்லைத்தீவிலும் வெள்ளிக்கிழமையன்று பி.ப. 1 மணிக்கு வவுனியாவிலும், மு.ப. 8 மணிக்கு மன்னாரிலும், பி.ப. 4 மணிக்கு கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.

இவ்வாரம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறமாட்டாது.

எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments