(ஏறாவூர் இரட்டை கொலைகள்

உயிர் விடுமுன் - அவள்
அனுபவித்த வலிகளும்,
அவளின் பெண்மைக்கு - நீ
செய்த அவமானமும்
அவளுடனே மரித்திருக்கும்...
உன் காமப்பசி தீர்ந்ததும் - நீ
கொன்று போட்டவளின்
வெற்றுடம்பில் - நீ
கிழித்துப் போட்ட ஆடையை ,
மேலாலாவது போர்த்தியிருக்கலாம்.
நாளை அவள் பிணத்தை
ஊரார் பார்க்கையில்,
அவளது சடலமும் வெட்கித்திருக்கும்

அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் 


Comments