இந்திய பிரதமர் இலங்கை வரவுள்ளார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் அவர் தனது இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் இந்திய சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் ஹட்டன் – டிக்ஓயா வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளார்.

அடுத்த வருடம் விசாகப் பூரணை தினத்தில் இந்த வைத்தியசாலை திறக்கப்படவுள்ளது.

அத்துடன் அன்றையதினம் காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள யோகா நிகழ்விலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது

Comments