மஹிந்தவுக்கு சந்தேகமாம்!

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒருசில மாதங்களாவது எடுக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொல்வின் ஆர். டி. சில்வாவுக்கு அன்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு சுமார் 3 வருட காலம் தேவைப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒருசில மாதங்களாவது எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தனக்கு இந்த புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில்  சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என தான் கருதவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments