வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக அரசாங்கத்தின் புதிய யுக்தி!

வெளிநாட்டவர்கள் காணிகளை பெறும்போது விதிக்கப்படும் 300 வீத வரியை மீளப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கிணங்க காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே.மகாநாம இன்று வெளியாகியுள்ள ஆங்கில வார இதழொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், குறித்த வரியை மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையர்களை திருமணம் செய்த வெளிநாட்டவர்களுக்கு உள்நாட்டில் நிரந்தர பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்குவதோடு, முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக உள்விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Comments