ஆணைக்குழுவில் முன்னிலையானார் பசில்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

பசில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் இலங்கை விமானப் படையின் விமானங்களை, தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்யும் வகையிலேயே அவர் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் தொடர்புடைய நிதி மோசடி சம்பவம் குறித்து பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த பந்துவிக்ரம மற்றும் நடிகர் ஜெக்ஷன் அண்டனி ஆகியோரும் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments