மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தீவிர விசாரணை!

மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல்களின் போது பாரியளவு மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சில உண்மைகளை அம்பலப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினர் மீது இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments