யெமனின் தாயிஸ் நகரில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை.

யெமனின் தாயிஸ் நகரில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 06 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 14 கிளர்ச்சியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரின் நிலைகள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு யெமன் இராணுவம் பலத்த பதிலடி வழங்கி அவர்களை பின்வாங்கச் செய்ததாக தாயிஸிலுள்ள இராணுவ கவுன்ஸிலின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கசப்லன்கா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் வாகன தொடரணியினை இலக்கு வைத்து யெமன் மக்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நிலக் கண்ணிவெடித் தாக்குதலில் அபூ அம்மார் எனும் புணை பெயருடைய ஹூதி தலைவர் ஒருவர் உட்பட 03 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இராணுவ தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Comments