சிகரட் விற்பனையாளர்களின் கவனத்திற்கு!

சிகரெட்டுக்களை விற்பனை செய்ய அனுமதிப்பத்திரம் இருக்க வேணடும் எனவும் அனுமதிப்பத்திரமின்றி ஏனைய வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது.

மேலும் சிகரெட் பாவனையை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான செயற்பாடாக இருந்தாலும் அதற்கு, மருத்துவ அதிகாரிகள் சங்கம் முழுமையாக உதவும் எனவும் நவிந்த சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

சங்கத்தின் இந்த எழுத்துமூலமான கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் செயலாளரான மருத்துவர் நவிந்த சொய்சா கூறியுள்ளார்.

ஆகவே விரைவில் இதற்கான பொருத்தமான ஒரு தீர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments