மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரும் யோஷித்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.

யோஷித்த, தனது சட்டத்தரணி ஊடாக இன்று நீமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி காரணமாக யோஷித்தவின் கடவுச்சீட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments