பேஸ்புக் முன்னுரிமை அளிக்கும் நபர்கள் யார் என்று தெரியுமா.? ஏன் அது நீங்களாவும் இருக்கலாம்..! இதோ தெரிந்துகொள்ளுங்கள்

உலக தற்கொலை தடுப்பு தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் இதில் பங்கேற்கவுள்ளது.

பேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும்.

தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். சமூக ஆர்வலர்கள் துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு உளரீதியான ஆதரவைத் தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments