அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!
அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியினால் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அவர் அந்த கடிதத்தில்,
யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ளன. எனினும் குற்றம் எதுவும் புரியாதவர்கள் இன்னும் சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் போது உரிய ஆவணங்கள் இல்லை என்றும் சாட்சியங்கள் இல்லை என்றும் தெரிவித்து இவர்கள் மீண்டும் சிறையிலேயே அடைக்கப்படுகின்றனர்.
காரணம் இல்லாமல் சில அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Comments
Post a Comment